நேர்கொண்ட பார்வை படத்திற்காக தியேட்டரை கோர்ட்டாக மாற்றிய ரசிகர்கள் - இதோ புகைப்படம்


நேர்கொண்ட பார்வை இயக்குனர் வினோத் எச் இயக்கத்தில் அஜித் குமார், வித்யாபாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே நடித்துள்ள த்ரில்லர் திரைப்படம். 

இத்திரைப்படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்க இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளளார். இத்திரைப்படம் ஹிந்தியில் வெளிவந்து வெற்றிபெற்ற "பிங்க்" திரைப்படத்தின் ரீமேக் ஆக உருவாகிவுள்ள திரைப்படம். 


மேலும் இத்திரைப்படத்தில் ஹிந்தியில் டாப்சீ கதாபாத்திரத்தில் ஸ்ரத்தா ஸ்ரீநாத் தமிழில் நடிக்கவுள்ளார், ஹிந்தியில் கிரடிக்குலஹரி கதாபாத்திரத்தில் அபிராமி வெங்கடாச்சலம் நடிக்க மற்றும் ஹிந்தியில் நடித்த ஆண்ட்ரியா தரிங் தமிழிலும் இவரே நடித்துள்ளார்.


இந்த படம் நாளை உலகம் முழுதும் வெளியாகவுள்ளnநிலையில் வழக்கமான அஜித் படங்களுக்கான கொண்டாட்டம் கலை கட்டியுள்ளது. அந்த வகையில், சென்னையில் உள்ள பிரபல திரையரங்கம் ஒன்றில் நீதி மன்ற வளாகம் போன்று செட் அமைத்துள்ளனர் ரசிகர்கள். இதோ அந்த புகைப்படம்,


Previous Post Next Post