"பிகில்" - பட்டாஸ் கெளப்பிய தகவல் - வேறு எந்த தமிழ் படமும் செய்யாத ரெக்கார்ட்..!


இந்த வருடம் தீபாவளி வெளியீடாக இயக்குநர் அட்லீ இயக்கி, ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்திருக்க நடிகர் விஜய் நடித்துள்ள 'பிகில்' திரைப்படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. 

இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், தற்போது இதன் வணிகப் பேச்சுவார்த்தைகள் முழு வீச்சில் தொடங்கியுள்ளன. 

குறிப்பாக இதன் தெலுங்கு டப்பிங் உரிமைகள் இதுவரை வேறெந்த தமிழ் படங்களும் தொடாத வகையில், 10 கோடிக்கும் அதிமான விலைக்கு விற்கப்பட்டுள்ளன. 


மற்ற மண்டலங்களிலும் ’பிகில்’ படத்தை அதிக தொகை கொடுத்து வாங்க விநியோகஸ்தர்கள் தயாராக இருக்கிறார்கள். அந்த வகையில் இது தளபதியின் மற்ற படங்களை விட அதிக சாதனை படைக்கும் எனத் தெரிகிறது.

மேலும்,இந்த திரைப்படம் விஜய்க்கு புதிய மைல் கல்லாக இருக்கும் என கூறுகிறார்கள் பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரகங்கள்.