சார் எங்களுக்கு மோதிரம் கிடைக்காதா..? - புலி படத்தில் பணியாற்றிய நடிகர் கேள்வி..!


நடிகர் விஜய் ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் படத்தின் பணியாற்றிய டெக்னீசியன்களை அழைத்து அவர்களுக்கு தங்கத்தில் பரிசு அளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில், அண்மையில் பிரம்மாண்டமாக தயாராகும் தனது பிகில் பட படப்பிடிப்பை முடிந்த நிலையில் படத்திற்காக பணிபுரிந்த டெக்னீசியன்கள் மற்றும் நடிகர் நடிகைகளுக்கு பரிசாக தங்க மோதிரத்தை பரிசளித்துள்ளார். 


அந்த செய்திகளும், மோதிரங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இப்போது பிரபல ஒளிப்பதிவாளரும், நடிகருமான நடராஜன், விஜய் சார் எங்களுக்கு எல்லாம் மோதிரம் கிடையாதா..? ஐ ஆம் வெயிட்டிங்..! என்று கேட்டதுடன் பிகில் குழுவினருக்கு வாழ்த்து கூறியுள்ளார்.


இவர், விஜய் நடிப்பில் வெளியாகி குழந்தைகளை மகிழ்வித்த "புலி" படத்தில் சினிமாட்டோகிராஃபராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.