ரெண்டாவது நாளே அஜித் இப்படி பண்ணுவாரு-ன்னு நான் எதிர்பார்க்கல - நேர்கொண்ட பார்வை நீதிபதி நடிகர் வியப்பு


நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை படத்தை வரவேற்க அஜித் ரசிகர்கள் முழு வீச்சில் ஆயத்தமாகி வருகிறார்கள். நாடு முழுதும் ரிசர்வேஷன். கொண்டாட்டம் என அஜித் ஃபீவர் அடித்துக்கொண்டிருகின்றது. 

இந்நிலையில், இந்த படத்தின் நீதிபதியாக நடித்துள்ள "டி.ராமசந்திரன் " நேர்கொண்ட பார்வை படப்பிடிப்பில் நடைபெற்ற சில சுவாரஸ்யமான  விஷயங்களை பகிர்ந்து கொண்டார். 

அவர் கூறுகையில், நடிகர் அஜித்தின் பணிவான பேச்சும், பண்பும் தான் அவரை இந்த உயரத்தில் வைத்திருக்கிறது என நேரில் பார்த்த போது தான் தெரிந்துகொண்டேன். 


சினிமாவில் நான் நடிக்கும் முதல் படம் இது. முதல் நாளே நான் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த போது கோர்ட் சீன் எடுக்கப்பட்டது. அஜித் வந்து எல்லோருக்கும் வணக்கம் சொல்லி என்னையும் வரவேற்று பேசினார். 


எனக்கு ஆச்சரியமாகி விட்டது. அவ்வளவு பெரிய உயரத்தில் இருப்பவர் என்னிடம் பேச வேண்டிய அவசியமில்லை. என்னுடன் அவர் தன்னுடைய எல்லா அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். 

ரெண்டாவது நாளே என்னோடு தான் நீங்கள் லஞ்ச் சாப்பிடவேண்டும் என கூறி அவருடன் அழைத்து சென்றார். பழகிய ரெண்டாவது நாளே இவ்வளவு நெருக்கமாக பழகும் ஒரு நடிகரா என்று வியந்து போனேன். 

படத்தில் அவர் வழக்கறிஞராக சில சம்பவங்களை பேசும் போது மிகவும் உணர்ச்சிவசமாக இருந்தது. அவர் கதாபாத்திரமாகவே மட்டுமில்லாமல் நிஜ வழக்கறிஞராக மாறிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.