விஜய் குரலில் தெறிக்கும் "வெறித்தனம்" முழுப்பாடலும் லீக் ஆனது - இணையத்தில் வைரலாகும் பாடல் - படக்குழு அதிர்ச்சி


விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘பிகில்’. அட்லீ இயக்கி வரும் இப்படத்தில் விஜய் அப்பா - மகன் என இரட்டை வேடங்களில் நடிக்கிறார். 

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், தீபாவளி தினத்தில் திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னணி இசையமைப்பாளர்கள் பலரது இசையில் பாடியுள்ள விஜய், முதன்முறையாக ஏ.ஆர்.ரகுமான் இசையில் ‘வெறித்தனம்’ என்ற பாடலை பாடியுள்ளார். 


இந்த பாடலை படக்குழுவினர் விரைவில் வெளியிட இருக்கும் நிலையில், இணைய தளத்தில் இப்பாடல் வெளியாகியுள்ளது. இது படக்குழுவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


பிகில் படக்குழுவினர் ஏற்கனவே ஏ.ஆர்.ரகுமான் பாடிய ‘சிங்கப்பெண்ணே’ பாடலும் இதே போல் இணையத்தில் லீக்கானது என்பது குறிப்பிடத்தக்கது.