சிரிப்பழகி நடிகை லைலா 16 வயதிலேயே சினிமாவில் நடிக்க துவங்கினார். 1996 ஆம் ஆண்டு 'துஸ்மன் துணியா கா' என்கிற இந்தி படத்தின் மூலம் தனது சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தார். தமிழில் 1999ஆம் ஆண்டு கள்ளழகர் படத்தில் விஜயகாந்துக்கு ஜோடியாக லைலா அறிமுகமானார்.
அதன் பின்னர் தமிழில் அவருக்கு வாய்ப்புகள் வர துவங்கியது. நடிகர் பிரசாந்துடன் பார்த்தேன் ரசித்தேன், அஜித்துடன் தீனா, சூர்யாவுடன் நந்தா, உன்னை நினைத்தது, விக்ரமுடன் தில் மற்றும் பிதமாகன் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்தார். பிதாமகன் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக இவர் செய்த ஆட்டூழியங்கள் தனி ரகளை.
ஆனால், உன்னை நினைத்து படத்தில் விஜய்யுடன் தான் லைலா நடித்துகொண்டிருந்தார்.படப்பிடிப்பு தொடங்கி சில நாட்களில் இயக்குனர் விக்ரமனுக்கு விஜய்க்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக விஜய் படத்தில் இருந்து விலகி விடவே சூர்யா ஹீரோவாக்கப்பட்டார்.
அந்த நேரத்தில் ஈரான் நாட்டை சேர்ந்த மெஹதீன் என்கின்ற தொழிலதிபருடன் லைலாவிற்கு காதல் ஏற்பட்டது. கிட்டத்தட்ட 7 வருடங்கள் இருவரும் காதலித்து வந்தனர். இருவருக்கும் 2006ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின்னர் கண்டிப்பாக நடிக்கப்போவதில்லை என்று லைலா ஸ்டிரிக்ட்டாக கூறிவிட்டார்.
ஆனாலும், சில பட வாய்ப்புகள் வந்தது. இருந்தாலும், லைலா நடிக்க மறுத்துவிட்டார். தற்போது அவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளது. தனது இரு மகன்களையும் பார்த்துக்கொண்டு வீட்டோடு இருந்தார். இப்போது, அலைஸ் என்ற ஒரு தமிழ் படத்தில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளார். இந்த படத்தில் என்ன கதாபாத்திரம் , என்னவாக நடிக்கிறார் என்பதையெல்லாம் இன்னும் படக்குழு தெரிவிக்கவில்லை.
மேலும், என் வயதுக்கு ஏற்ற கதாபாத்திரங்கள் வந்தால் கண்டிப்பாக நடிப்பேன் என கூறுகிறார் லைலா. இதனால், மீண்டும் லைலாவை திரையில் பார்க்கலாம்.



