ஐயோ.. சார்.. நீங்க சொன்ன உடனே நான் அனுப்பிட்டேன் சார் - விஜய்யிடம் பதறிய அட்லி - என்ன காரணம்...?


அட்லி - விஜய் கூட்டணியில் உருவாகி வரும் படத்தில் நடிகர் ஆனந்த்ராஜும் நடித்துள்ளார். நடிகை ஜோதிகா நடித்துள்ள "ஜாக்பாட்" படத்திலும் நடிகர் ஆனந்த்ராஜ் நடித்துள்ளார். 

இந்நிலையில், கடந்த 27-ம் தேதி பிகில் படப்பிடிப்பில் ஆனந்த்ராஜ் மற்றும் விஜய் இருவரும் இணைந்து வரும் காட்சிகள் படமாக்கப்பட்டு கொண்டிருந்தன. இதனால், ஆனந்த் விஜய்யிடம் இன்று ஜாக்பாட் படத்தின் ஆடியோ லாஞ்ச் இருக்கு சார் என்று கூறியுள்ளார். 


விஷயம் அறிந்த விஜய் இயக்குனர் அட்லியிடம் விஷயத்தை கூற அட்லியும் சரி சார் நாளைக்கு பாத்துக்கலாம் நீங்க கெளம்புங்க என்று கூறி அனுப்பி வைத்து விட்டார். 


அடுத்த நாள் ஷூட்டிங் வந்த ஆனந்த்ராஜிடம் என்ன சார் ஆடியோ லான்ச்-லாம் நல்லா போச்சா என்று கேட்டுள்ளார் விஜய். ஆனால், ஆனந்த் ராஜ் " எங்க சார் நான் போறதுக்குள்ள ஆடியோ லாஞ்ச் முடிஞ்சு போச்சு. சரியான நேரத்துக்கு போக முடியல" என்று கூறியுள்ளார்.

இதனை கேட்டு ஷாக் ஆன விஜய், அட்லியை மெதுவாக திரும்பி பார்த்துள்ளார். விஷயத்தை புரிந்து கொண்ட அட்லி.." ஐயோ.. சார் நான் நீங்க சொன்ன உடனே அனுப்பிட்டேன் சார்" என்று பதறியுள்ளார். இதனை நடிகர் ஆனந்த் ராஜே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.