அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் பிகில். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் விஜய் பயிற்சியாளராக நடிக்கிறார்.
அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில், பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தாலும் பிரபல காமெடி நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பது ரசிகர்கள் மத்தியில் கவனிக்கப்படும் விஷயங்களில் ஒன்றாக உள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய ரோபோ சங்கர் தன்னுடைய மகள் குறித்து விஜய் கூறிய சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.இதுகுறித்து அவர் ஒரு பேட்டியில், முதல் படமே விஜய் அவர்களுடன் நடிக்கும் வாய்ப்பு என் மகளுக்கு கிடைத்துள்ளது.
முதல் நாள் படப்பிடிப்பு முடிந்ததும், விஜய் சார், "உங்க பொண்ணு பின்னி பிடலெடுத்துட்டா னா..?" உங்க மகளை எங்க வீட்டு பொண்ணு மாதிரி நாங்க பார்த்துகிறோம் என்று கூறியதாக ரோபோ ஷங்கர் பேசியுள்ளார்.
Tags
Bigil Movie