பிகில் திரையரங்குகள் எண்ணிக்கை குறித்து அப்செட்டில் இருந்த தளபதி ரசிகர்கள் - தயாரிப்பாளர் கொடுத்த அதிரடி அப்டேட்..!


நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ளது பிகில் திரைப்படம். இந்த படத்தினை 2019 தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். 

ஆனால், அதே நாளில் நடிகர் கார்த்தியின் "கைதி" மற்றும் நடிகர் விஜய் சேதுபதியின் "சங்கத்தமிழன்" ஆகிய படங்களும் ரிலீஸ் ஆகவுள்ளன. இதனால், பிகில் படத்திற்கு தமிழகத்தில் திரையரங்குகள் எண்ணிக்கை குறையும் அபாயம் உள்ளது என விஜய் ரசிகர்கள் அப்செட்டில் இருந்தனர்.


இன்னும், சில கடைசி நேரத்தில் மற்ற படங்களை தள்ளி வைத்து விடுவார்கள் என்று கூட கூறி வந்தனர். ஆனால், பேட்ட vs விஸ்வாசம் என இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆனாலும் அதே வசூலை பெற்றுக்கொடுத்தன. 


இதனால், விநியோகஸ்தர்கள் தரப்பில் தீபாவளிக்கு பிகிலுடன் ரிலீஸ் தங்கள் படங்களை செய்ய நினைக்கும் தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாக படத்தை ரிலீஸ் பண்ணுங்க யாருக்கும் பிரச்சனை இல்ல என்று கூறி நம்பிக்கை கொடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில், அப்செட்டில் இருந்த விஜய் ரசிகர்களை ஆறுதல் படுத்தும் விதமாக பிகில் பட தயாரிப்பாளர் ஒரு அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, "பிகில் திரைப்படம் திரையிடும் திரைகளின் எண்ணிக்கை ஒரு சாதனையாக இருக்கும் " என கூறியுள்ளார்.