தளபதி விஜய் நடிப்பில் இந்த தீபாவளி விருந்தாக திரைக்கு வரவுள்ள படம் பிகில். இப்படத்தில் நயன்தாரா, கதிர், இந்துஜா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இந்நிலையில் பிகில் படத்தின் கதை இது தான் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து ஒரு தகவல் கிடைத்துள்ளது. இதில், விஜய் வடசென்னையில் மீன் விற்பவராக வருவாராம், அந்த பகுதியில் இருக்கும் பகால்பந்தாட்ட அணி லோக்கல் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி மேல் வெற்றி பெற்றுக்கொண்டிருக்கிறது.
ஒரு கட்டத்தில், பிரபல கார்பரேட் நிறுவனம் ஒன்று ஸ்பான்சர் செய்துள்ள ஒரு கால்பந்தாட்ட அணி, வட சென்னை அணியிடம் தோற்றுவிடுகின்றது. இதனால், அந்த கார்ப்ரேட் நிறுவனம் அந்த அணிக்கு எதிராக நாசவேலைகளை செய்கிறது.
அப்போது அப்பா விஜய் அதை தட்டிக்கேட்க, ஒரு கட்டத்தில் அவர் இறக்கும் நிலை வருகின்றதாம். அதனால், இனி கால்பந்து என்ற விஷயத்துக்கே போக கூடாது என்றும் பயந்து ஒதுங்குகிறார் மகன் விஜய்.
இதே போல ஒரு பிரச்சனை அந்த பகுதியில் புதிதாக உருவான மகளிர் புட்பால் அணிக்கு வருகின்றது. எக்காரணம் கொண்டு நம் அப்பாவிற்கு நடந்த கொடுமை இந்த கால்பந்தாட்ட அணிக்கு நடந்து விட கூடாது என்று எண்ணிய மகன் விஜய் காட்டும் அடிதடி சரவெடி தான் எஞ்சிய கதை.
Tags
Bigil Movie