இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜெயம்ரவி நடித்த வனமகன் படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமாவனர் ஹிந்தி நடிகை சாயிஷா சைகள்.
பிரபல பாலிவுட் நடிகர் திலீப்குமாரின் பேத்தியான இவர், அதன்பிறகு தமிழில் கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா, கஜினிகாந்த் படங்களில் நடித்தவர். தற்போது காப்பான், டெடி படங்களில் நடித்து வருகிறார்.
மேலும், நடிகர் ஆர்யாவின் கஜினிகாந்த் படத்தில் நடித்தபோது ஆர்யாவிற்கும் சாயிஷாவிற்குமிடையே காதல் உருவான நிலையில், சற்றும் தாமதிக்காமல் கடந்த மார்ச் மாதம் அவர்கள் திருமணம் செய்து கொண்டு ரசிகர்களை ஷாக் ஆக்கினார்கள்.
ஆனால், திருமணம் தனக்கு ஒரு தடையில்லை என்று தொடர்ந்து நடித்து வருகிறார் சாயிஷா சைகள். ஆர்யாவுடனும் தற்போது "டெடி" என்ற படத்தில் நடிக்கிறார். மேலும் சமீபத்தில் காக்க காக்க பட பாடலை சிறப்பாக பாடி அந்த வீடியோவை இணையப் பக்கத்தில் வெளியிட்ட சாயிஷா, தன்னைப்பற்றிய சில அப்டேட்களையும் அவ்வப்போது ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டு வருகிறார்.
இந்நிலையில், திருமணத்திற்கு முன்பு நடித்ததைப் போலவே இப்போதும் கவர்ச்சிக்கு எந்த தடையும் சொல்லாமல் அப்படியே நடித்து வரும் சாயிஷா, சமீபத்தில் ஒரு விழாவில் கலந்து கொண்டபோது, செம்ம கவர்ச்சியாக உடையணிந்து அதிர வைத்துள்ளார்.
அந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வரும்நிலையில், ஆர்யா ரொம்ப பாவம் என்று நெட்டிசன்கள் கிண்டலாக கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.
Tags
Actor Arya