பேட் மேனுக்கு சென்ற விஜய்யின் பிகில் தங்க மோதிரம்..! - அட நெசமா தாங்க..! - வைரல் புகைப்படம்..!


நடிகர் விஜய் சமீபத்தில் தன்னுடன் பணியாற்றிய சுமார் 400 ஊழியர்களுக்கு தங்க மோதிரம் பரிசாக கொடுத்து அசத்தினார். 

அப்படி மோதிரத்தை பெற்றுக்கொண்ட நடிகர், நடிகைகள் மற்றும் டெக்னீசியன்கள் பலரும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக சமூக வலைதளங்களில் மோதிரத்தின் புகைப்படங்களை வெளியிட்டனர். 


அந்த வகையில் பிரபல போஸ்டர் மற்றும் டைட்டில் டிசைனர் கோபி பிரசன்னா-வும் அந்த புகைப்ப்டத்தை வெளியிட்டு தனது மகிழ்ச்சியை நெகிழ்ச்சியாக வெளிப்படுத்தியுள்ளார். 


அவர், ஒரு பப்ளிசிட்டி டிசைனராக நான் பெற்ற முதல் விருது இது..! நன்றி விஜய் சார்..! என்று கூறியுள்ளார். மேலும், அந்த மோதிரத்தை பேட் மேன் தாங்கி நிற்பது போல, பேட் மேன் பொம்மையில் மோதிரத்தை மாட்டி வைத்துள்ளார்கோபி பிரசன்னா.
Previous Post Next Post
--Advertisement--