சமீபத்தில் தெலுங்கின் முன்னணி நடிகர் சிரஞ்சீவி நடிக்கும், “சைரா
நரசிம்ம ரெட்டி” படத்தின் டீசர் வெளியானது.
இந்த நிகழ்ச்சியில் படத்தில்
நடித்த நட்சத்திரங்களுடன், திரையுலக பிரபலங்களும் கலந்துக் கொண்டனர்.
இருப்பினும் இதில் நயன்தாரா கலந்துக் கொள்ளவில்லை.
நடிகர் ரஜினியுடன்நடித்துக்கொண்டிருக்கும் தர்பார் படத்தின் படப்பிடிப்பிற்காக வெளிநாடு சென்றுள்ளதால் தான் அவரால் பங்கேற்க முடியவில்லை.
இதனை தொடர்ந்து, அரை டஜன் ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களில் நடிக்கவுள்ளராம் அம்மணி. கதை கூறி விட்டு காத்திருக்கும் இயக்குனர்கள் ஒருப்பக்கம் இருக்க இவரது திருமண வேலைகளும் ஒரு பக்கம் நடந்து வருவதாக கூறுகிறார்கள்.
ஹீரோக்களுக்காக எழுதிய கதைகளை ஹீரோ கிடைக்கவில்லை என்பதால் அப்படியே உல்டா செய்து ஹீரோயின் சப்ஜெக்ட்டாக மாற்றிவிடுகிறார்கள் நம்ம இயக்குனர்கள்.
அந்த வகையில், நடிகை நயன்தாரா தான் நடிக்கும் ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களுக்கு 4 முதல் 5 கோடி ரூபாய் சம்பளமாக பெறுவதாக தகவல்ககள் வெளியாகியுள்ளன.
Tags
Nayanthara