நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள "நேர்கொண்ட பார்வை" திரைப்படம் வருகிற 8ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இதற்கிடையில் இப்படத்தின் ப்ரீமியர் ஷோ சிங்கப்பூரில் திரையிடப்பட்டது.
இதில் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், வித்யா பாலன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும் சென்னையில் பத்திரிக்கையாளர்களுக்காக ஸ்பெஷல் ஷோ ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் இயக்குனர் எச்.வினோத், ரங்கராஜ் பாண்டே ஆகியோர் கலந்துகொண்டனர்.
இது நாள் வரை இயக்குனர் வினோத் சிரித்ததை பலரும் பார்த்திருக்க மாட்டார்கள். எந்த நிகழ்ச்சியில் போட்டோவிற்கு போஸ் கொடுத்தாலும் எதையோ இழந்தவர் போல உம்மெனவே இருப்பார். ஆனால், பிரீமியர் காட்சி முடிந்து வெளியே வந்த வந்தவர்களை சிரித்த முகத்துடன் எச்.வினோத் வழியனுப்பி வைத்தார். இதனை பார்த்த ரசிகர்கள்tதலைவன் சிரிசுட்டான்யா..! என்று ஆச்சரியத்துடன் கூறிவருகிறார்கள்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அஜித்தின் அடுத்த படத்தையும் போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் தனது சொந்த கதையில் இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைவன் சிரிச்சுட்டான் யா #NerkondaPaarvaiWorldPremiere pic.twitter.com/yz22fXVeqv— 👑👑தல²⁷ʸʳˢᴬʲⁱᵗʰⁱˢᵐ 👑👑 (@Thala__Speaks) August 6, 2019


