ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'நேர்கொண்ட பார்வை'. போனி கபூர் தயாரித்துள்ள இந்தப் படம், இந்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'பிங்க்' படத்தின் ரீமேக்காகும்.
ஆகஸ்ட் 8-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தை போனி கபூர் நேற்று (ஆகஸ்ட் 1) சென்னையில் தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு திரையிட்டு காட்டியுள்ளார்.
இதில் அர்ஜுன் கபூர், அருண் விஜய், புகைப்பட நிபுணர் கார்த்திக் ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட பலர் பார்த்தனர். இந்நிலையில், ஆகஸ்ட் 8-ம் தேதி வெளியாகவுள்ள இந்த படத்தின் சென்னையில் உள்ள பிரபல திரையரங்கமான "GK Cinema" இந்தியாவின் முதல் ஆர்சிபி லேசர் வசதி கொண்ட புரொஜக்டரை கொண்டு நேர்கொண்ட பார்வை படத்தை ஒளிபரப்பு செய்யவுள்ளது.
இதன் மூலம் படம் பார்ப்பது இந்திய சினிமா ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவமாக இருக்குமாம். இந்தியாவிலேயே முதல் லேசர் வசதி கொண்ட புரொஜக்டரில் நேர்கொண்ட பார்வை படத்தை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆவலில் உள்ளனர்.
இந்த ப்ரொஜக்டருக்கு கிடைக்கும் வரவேற்பை பொருத்து பிற அரங்குகளிலும் பொருத்துவது குறித்துமுடிவு எடுக்கப்படும் என்கிறார்கள் தியேட்டர் உரிமையாளர்கள்.
Tags
Nerkonda Paarvai