நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்தின் பெயர் நீதி தேவன் இல்லை - இது தான்..! - மாஸ் அப்டேட்..!


இந்தியில் வெளியான "பிங்க்" படத்தில் நீளம் 130 நிமிடங்கள். ஆனால், அந்த படத்தின் ரீமேக் படமான நேர்கொண்ட பார்வை 158 நிமிடங்களுக்கு உள்ளது. இதற்காண காரணத்தை ஆங்கில் நாளிதழ் ஒன்றின் பேட்டியில் ஹெச்.வினோத் கூறியுள்ளார். 

இயக்குநர் ஹெச்.வினோத், படத்தின் அடிப்படைக் கதை அம்சத்தை மாற்ற விரும்பவில்லை. மாற்றவும் இல்லை. அஜித் ரசிகர்களை மனதில் வைத்துக் கொண்டு கூடுதலாக 25 நிமிடங்களை நேர்கொண்ட பார்வை படத்தில் இணைத்துள்ளேன். 


இதில், நடிகை வித்யாபாலன் வருகிற 10 நிமிடங்களும் உள்ளன. படத்தின் மையக்கருத்தை இழக்காமல் கமர்ஷியல் படமாக உருவாக்க எண்ணினேன். அதனால் தான் 20 நிமிடம் அதிகம் என்று கூறியுள்ளார்.


இதனிடையே, இந்த படத்தில் நடிகர் அஜித்தின் பெயர் நீதி தேவன் என்று சில தகவல்கள் பரவி வந்தன. அதனை நம்முடைய தளத்தில் கூட வெளியிட்டிருந்தோம். இந்நிலையில், இந்த படத்தின் பத்திரிகையாளர்களுக்கான ஸ்பெஷல் காட்சி இன்று ஒளிபரப்பட்டது. இதன் மூலம், இந்த படத்தில் அஜித்தின் பெயர் நீதி தேவன் இல்லை சுப்பிரமணிய பரத் என்று தெரிய வந்துள்ளது.
Previous Post Next Post