கடந்த ஆண்டு தெலுங்கில் வெற்றிகரமாக ஓடிய பட ‘அவ்.’ இதில் காஜல் அகர்வால், நித்யாமேனன், ரெஜினா உள்பட பல முன்னணி நடிகர்-நடிகைகள் நடித்து இருந்தனர்.
இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதால் அதன் இரண்டாம் பாகம் தயாராகிறது. இரண்டாம் பாகத்திலும் காஜல் அகர்வால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
அவருக்கு ஜோடியாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். இதன்மூலம் இரண்டு பேரும் முதல் முறையாக ஜோடி சேர்ந்திருக்கிறார்கள்.
விஜய் சேதுபதி, காஜல் அகர்வால் இதுகுறித்து படத்தின் டைரக்டர் பிரசாந்த் வர்மா கூறுகையில், முதல் பாகத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கதையம்சம் கொண்ட படமாக இருக்கும்.
முதல் பாகத்தில் பல கதைகள் வந்து போனது. இந்த படத்தில் ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரே கதை மட்டுமே இருக்கும். என்று அவர் கூறியுள்ளார்.



