நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிவரும் "பிகில்" திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. இந்த படம் குறித்த தகவல்கள் நாள் தோறும் வெளியாகிவருகின்றன.
இதனை தொடர்ந்து, படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விரைவில் தொடங்கவுள்ள நிலையில் தற்போது வந்துள்ள ஒரு தகவல் ரசிகர்களின் BP-யை எகிற வைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
படத்தின் இசையமைப்பாளரான இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் "பிகில்" படத்தில் முக்கியமான காட்சி ஒன்றில் நடித்துள்ளாராம். அனேகமாக பாடல் காட்சி எதிலாவது ஒன்றில் தான் தோன்றுவார் என்கிறார்கள். அது எந்த மாதிரியான காட்சி, என்னவாக நடிக்கிறார் என்ற விபரம் இப்போது வரை தெரியவில்லை.
ஆனால், ஏ.ஆர்.ரஹ்மானின் கெஸ்ட் அப்பியரன்ஸ் கண்டிப்பாக இருக்கும் என்கிறார்கள் படகுழுவிற்கு நெருங்கிய வட்டாரங்கள். இப்போது, இந்த பதிவின் தலைப்பை மீண்டும் படியுங்கள்.
Tags
Bigil Movie