ரஜினி -சிவா இணையும் அடுத்த படம் எந்த மாதிரியான கதை - பிரபலம் கூறிய தகவல்


இயக்குனர் சிறுத்தை சிவா நடிகர் கார்த்தி நடித்த சிறுத்தை படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக நுழைந்தவர். இயக்கிய முதல் படமே சூப்பர் ஹிட் அடித்தது. 

தொடர்ந்து, அஜித்துடன் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என தொடர்ந்து நான்கு ஹிட் படங்களை கொடுத்தார். இவர் இயக்கத்தில் அடுத்து யார் நடிப்பார் என்பது பெரிய கேள்விக்குறியாக இருந்தது. 


இந்நிலையில் இவர் அடுத்து ரஜினியை இயக்கவுள்ளதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. அரசியல் மற்றும் நாட்டு நடப்புகளை கதையில் ஒட்டி விட்டு படங்களை ஓட்டிக்கொண்டிருக்கும் இயக்குனர்கள் பெருகிவிட்ட இந்த காலத்தில் சிறுத்தை சிவா தனித்து நிற்கிறார். 


இவரது படமென்றால் அரசியல் சாயல் அறவே இருக்காது. குடும்பத்துடன் எல்லா தரப்பினரும் பார்த்து ரசிக்கும் வகையில் தான் இருக்கும். 

இந்நிலையில், சிவா-ரஜினி இணையவுள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாம்.மேலும், இந்த படம் படையப்பா போல குடும்பப்பாங்கான அரசியல் கலப்பு இன்று இருக்கும் என ஒரு சினிமா பிரபலம் கூறியுள்ளார். 

கதையை கேட்டதும் ரஜினிக்கு மிகவும் பிடித்துவிட்டதாம். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
Previous Post Next Post