படமே ரிலீஸ் ஆவதில்லை என்றாலும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. நடிகர் சிம்பு குறித்த நேரத்தில் படப்பிடிப்புக்கு வருவதில்லை என்ற குற்றச்சாட்டும் அடிக்கடி தயாரிப்பாளர்கள் மத்தியில் முன்வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அவர் நடிக்க இருந்த மாநாடு படம் கைவிடப்பட்டதாகவும், விரைவில் புதிய பரிமாணத்தோடு தொடங்கும் என்றும் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சமீபத்தில் அறிக்கை வெளியிட்டார்.
இந்நிலையில், சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரிப்பு சிம்பு மஹா மாநாடு என்ற தலைப்பில் படம் நடிக்க இருக்கிறாராம். ஒரு படத்தில் இருந்து நீக்கப்பட்ட அதே வேகத்தில் இப்படி ஒரு செய்தி அதிரடியாக வந்திருப்பது பலருக்கு ஷாக் தான்.
அதோடு இந்த படத்தை சிம்புவே இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இப்படம் ரூ 125 கோடி தயாரிப்பில் 5 மொழியில் வரவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
சிம்பு படங்கள் இதுவரை 50 கோடி என்ற இலக்கையே எட்டியது கிடையாது. ஆனால், என்ன நம்பிக்கையில் ஒரு படத்தில் 125 கோடியை இறக்குகிறார்கள் என்று ஷாக் ஆகித்தான் கிடக்கிறார்கள் ரசிகர்கள்.
மேலும், அவரே தயாரிப்பதால் அவருடைய வீட்டுக்குள்ளேயே படத்தை எடுத்து முடித்து விடுவார் என்று கிண்டலடித்து வருகிறார்கள் ஒரு தரப்பு ரசிகர்கள்.


