நடிகர் அஜித் நடிப்பில் வெளியான "நேர்கொண்ட பார்வை" திரைப்படம் தமிழ் சினிமாவில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. டாப் ஹீரோக்கள் மாஸ் மசாலாவை தவிர்த்து சமூக கருத்து சொல்லும் படங்களில் நடித்தாலும் ரசிகர்கள் ஏற்பார்களா..? வசூல் வருமா..? இதெல்லாம் தேவையில்லாத வம்பு..? என்று பலரும் பேசி வருகிறார்கள்.
ஆனால், நடிகர் அஜித் அப்படி ஒரு கருவை கொண்ட கதையில் நடித்து, ரசிகர்கள் நல்ல விஷயங்களை எப்போதும் ஆதரிப்பார்கள் என்பதை மீண்டும் ஒரு முறை நிருபித்துள்ளார்.
இந்நிலையில், தமிழ் சினிமாவின் அடையாளம் என்றும் சொல்லும் அளவுக்குவளர்ந்துள்ள நடிகர் விஜய் ஏன் இது போன்ற படங்களில் நடிக்க பயப்படுகிறார் என பிரபல நகைச்சுவை நடிகரும் இயக்குனருமான மனோபாலா ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.
அவர் கூறுகையில், இயக்குனர் எச்.வினோத் இந்த படம் துவங்கும் முன்பே விஜய்யிடம் ஒரு கதை சொன்னார். அஜித் எடுத்துள்ள அந்த ரிஸ்கை எடுக்க விஜய்யும் தயாராக இருக்கிறார்.
ஆனால், விஜய்யின் வியாபார வட்டம் பெரியது. 100 - 150 கோடி வியாபாரம் மட்டுமே ஆகும் அவர் படத்தில் சிறிய தவறு ஏற்பட்டாலும் தயாரிப்பாளர் விநியோகஸ்தர்கள் பலரும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
நடிகர் விஜய் அடுத்தவர்கள் காசில் ஊறுகாய் போட விரும்பமாட்டார். இதனால் தான் வழக்கமான பாணியில் இருந்து விலக விஜய் மிகவும் பயப்படுகிறார் என மனோபாலா கூறியுள்ளார்.
நேர்கொண்ட பார்வை இயக்குனர் எச்.வினோத்தின் முதல் படம் சதுரங்க வேட்டை படத்தினை தயாரித்தவர் மனோபாலா என்பது குறிப்பிடத்தக்கது.
Tags
Actor Vijay