விஸ்வாசம் படத்தை மிஞ்சிய நேர்கொண்ட பார்வை புக்கிங் - இதோ ஆதாரம்..!


பாலிவுட்டில் அமிதாப்பச்சன், டாப்ஸி உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் பிங்க். போனி கபூர் தயாரிப்பில் அஜித் குமார் நடிப்பில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அஜித் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அவரை எதிர்த்து வாதிடும் வழக்கறிஞராக ரங்கராஜ் பாண்டே நடித்துள்ளார். படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுக்கிறார் வித்யாபாலன். மேலும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில், படம் ஆகஸ்ட் 8-ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.படத்தின் ரிலீசுக்கு இன்னும் மூன்றே நாட்கள் உள்ள நிலையில் பெரும்பாலான திரையரங்களில் முன்பதிவு ஆரம்பமாகி விட்டது.


இந்நிலையில், பிரபல திரையரங்கம் சிவசக்தி சினிமாஸ் "நேர்கொண்ட பார்வை" படத்தின் புக்கிங் ஸ்டேடஸ் குறித்து ஒரு தகவலை வெளியிட்டுள்ளது.

அதில், விஸ்வாசம் படத்தின் புக்கிங்கை விட நேர்கொண்ட பார்வை படத்திற்கான புக்கிங் அதிக அளவில் நடைபெற்றுள்ளது என கூறியுள்ளது. நாளை முதல் தமிழகமெங்கும் உள்ள அனைத்து அரங்குகளிலும் முன்பதிவு தொடங்கவுள்ளது என்பது உபரி தகவல்
Previous Post Next Post