அமிதாப் பச்சன், டாப்ஸி உள்ளிட்டோர் நடித்து இந்தியில் வெற்றி பெற்ற பிங்க் படத்தை அஜித், வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டோரை வைத்து நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார் ஹெச். வினோத்.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ள இந்த படம் நாளை ரிலீஸாக உள்ளது. படத்தை முதல் நாளே பார்த்துவிடும் ஆசையில் உள்ளனர் அஜித் ரசிகர்கள்.முன்னதாக நேர்கொண்ட பார்வை படத்தின் ப்ரீமியர் ஷோ சிங்கப்பூரில் நேற்று நடந்தது.
மேலும் செய்தியாளர்களுக்காக படத்தை பிரத்யேகமாக நேற்று திரையிட்டார்கள். பிங்க் படம் போன்று இல்லாமல் நேர்கொண்ட பார்வையில் அஜித் ரசிகர்களுக்காக சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக வினோத் தெரிவித்திருந்தார். அந்த மாற்றங்கள் இரண்டே இரண்டு தான்.
மற்றபடி பிங்க் படத்தை அப்படியே அழகாக ரீமேக் செய்துள்ளார் வினோத்.நல்ல விமர்சனங்களை பெற்றுள்ள நேர்கொண்ட பார்வை படத்தின் கதையின் கருவே, பெண்கள் சுதந்திரம் தான். மேம்போக்காக பெண் சுதந்திரம் என்று பேசி விட்டு போவதல்ல.
ஒரு பெண்ணுக்கு அனைத்து உரிமையும் இருக்கிறது. அவள் விரும்பியதை அவள் செய்வாள் அதனை வைத்து ஆண்கள் அவளிடம் உரிமை எடுத்துக்கொள்ள கூடாது. ஒரு பெண் உன்னை நண்பனாக பார்க்கிறாள். உன்னுடன் நெருங்கி பழகுகிறாள் என்பதற்காக அவளுடைய அனுமதி இன்றி அவளை நீ நெருங்க கூடாது.
கவர்ச்சியாக உடை உடுத்துகிறாள். நிறைய ஆண் நண்பர்களுடன் பழகுகிறாள் என்பதற்காக அவளை தவறாக எண்ணுவதும், எல்லை மீறுவதும் மன்னிக்க முடியாத குற்றம் என்பது போன்ற அழுத்தமான கருத்துகளை மிக அழுத்தமாக சொல்லும் படம் தான் இந்த நேர்கொண்ட பார்வை.
இந்த படத்தை வரவேற்க முழு வீச்சில் தயாராகி வரும் அஜித் ரசிகர்கள் போஸ்டர், ப்ளக்ஸ் என வழக்கம் போல கொண்டாடி வருகிறர்கள.
இந்நிலையில், அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் போஸ்டரை எடிட் செய்து குற்றவாளி கூண்டிற்குள் இருப்பது போன்று அவரது ரசிகர்கள் அடித்துள்ள ப்ளக்ஸ் போர்டு ஒன்று ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகின்றது.
இதோ, அஜித்திற்காக குற்றவாளிகளாக மாறிய அந்த ரசிகர்கள்,
Tags
Nerkonda Paarvai