"ஒரு பொண்ணு நோ சொன்னா..! நோ தான்" - ஆடியன்சை அதிரவைக்கும் "தல"..! - மாஸ் அப்டேட்


நேர்கொண்ட பார்வை படத்தில் மீரா கிருஷ்ணன், ஃபமிலா, ஆண்ட்ரியா என்ற மூன்று பெண்களும் சென்னையில் தனியாக வீடு எடுத்துத் தங்கியிருக்கிறார்கள். 

கர்ப்பிணி மனைவியை இழந்த காரணத்தினால் மனநலம் பாதிக்கக்பட்டவாரக இருக்கும் வழக்கறிஞரான அஜித் அந்த வீட்டிற்கு அருகில் புதிதாகக் குடிவருகிறார். இவரது பெயர் பரத் சுந்தரம்.  மூன்று பெண்களும் ஒரு நாள் நண்பர்களுடனான பார்ட்டியின்போது, புதிதாக அறிமுகமான இளைஞன் ஒருவன் மீராவை பலாத்காரம் செய்ய முயற்சி செய்கிறார். 

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மூன்று பெண்களும் பலாத்காரம் செய்ய முயன்ற அவனை பாட்டிலால் அடித்துவிட்டு அங்கிருந்து வெளியேறுகிறார்கள். 


அடிவாங்கிய இளைஞன் சாதரண ஆள் இல்லை, அரசியல் தொடர்பும், பணமும் உள்ளவன் என்பதால், அவன் கொடுத்த கொலை முயற்சி புகாரில் மீராவைக் கைதுசெய்கிறது காவல்துறை. 


அப்போது அவர்களுக்காக வாதாட முன்வருகிறார் அஜித். இந்த வழக்கின் முடிவில் யார் தண்டிக்கப்படுகிறார்கள் என்பது தான் கதை. படத்தில் இடம் பெற்றுள்ள நீதிமன்ற காட்சிகள் தான் படத்தின் சுவரஸ்யாமான விஷயம். அதிலும் ஒரு இடத்தில்,  "ஒரு பொண்ணு நோ சொன்னா..! நோ தான்" என அதிரவைக்கும் காட்சிகள் தெறி ரகம். அஜித் ரசிகர்களுக்காவே சில சண்டை கட்சிகள் மற்றும் வசனங்களை மாற்றியமைத்துள்ளார் இயக்குனர் வினோத். 

மொத்தத்தில், இந்த வருடத்தின் அஜித்தின் இரண்டாவது சூப்பர் ஹிட் படம் தான் இந்த நேர்கொண்ட பார்வை. இந்த படம் பெண் ரசிகைகள்mமத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெரும் என்பது மறுக்கமுடியாத உண்மை.