தமிழ் சினிமாவில் ஹீரோயின் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. பொதுவாகவே, தெலுங்கிலிருந்தோ, ஹிந்தியிலிருந்தோ, மலையாளத்திலிருந்தோ வரும் ஒரு ஹீரோயினின் படம் ஹிட்டானால், அடுத்தடுத்து அவரைத் தேடி பல வாய்ப்புகள் வரும்.
ஆனால், தமிழில் நடித்து ஒரு படம் கூட வெளிவராத நிலையில் அடுத்தடுத்து வாய்ப்புகளைப் பெறுவது சாதாரண விஷயமில்லை. அப்படி தன்னுடைய முதல் படம் வெளிவருவதற்கு முன்பே பல வாய்ப்புகளைப் பெற்ற நடிகையாக கீர்த்தி சுரேஷ் இருந்தார். அந்த வரிசையில் தற்போது ராஷி கண்ணாவும் இடம் பிடித்துவிட்டார்.
தெலுங்கு, ஹிந்தி, மலையாளத்தில் நடித்துள்ள ராஷி கண்ணா, தமிழில் சித்தார்த் நடிக்கும் 'சைத்தான் கா பச்சா' படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆனார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு மெதுவாக நடைபெற்று வருகிறது.
அதற்கடுத்து அவர் நடிக்க ஒப்பந்தம் ஆன, 'இமைக்கா நொடிகள்' 'அடங்க மறு' 'அயோக்யா' போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஓரளவுக்கு அறிமுகம் பெற்றுள்ளார். இன்னும், ராஷி கண்ணா என்று சொன்னவுடன் தெரிந்து கொள்ளும் அளவுக்கு பிரபலம் ஆகவில்லை என்றாலும் கோலிவுட்டில் அம்மணிக்கு கொளுத்த டிமாண்ட் காணப்படுகிறது.
தற்போது, சங்கத்தமிழன், கடைசி விவசாயி போன்ற படங்களில் நடித்து வரும்kகறார் பேர்வழி எல்லாம் கிடையாது. இயக்குனர், சக நடிகர்கள் என அனைவருடனும் நட்பாகவே பழகுகிறார்.
அதே போல, உஷாராக இருக்கிறேன் என்று அண்ணா, அண்ணா என நடிகர்களை அழைக்கும் பழக்கமும் இல்லை. இதனாலேயே இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்துவ வருகின்றன. அஜித், விஜய் ஆகியோருடன் ஜோடி சேர்ந்து விட்டால் தமிழ் சினிமாவில் அடுத்த கட்டத்திற்கு சென்று விடலாம் என கனவில் இருக்கிறார் அம்மணி.
அது நடக்கறப்போ நடக்கட்டும் என இப்போதைக்கு தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அம்மணி வெளியிட்ட படு ஹாட்டான் புகைப்படம் இதோ,





