ரிலீஸ் விபரத்துடன் வெளியான புதிய பிகில் போஸ்டர் - அதிகாரபூர்வ அறிவிப்பு...!


நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி எழுதி, இயக்கியுள்ள "பிகில்" திரைப்படம் பற்றி அப்டேட் வேண்டும் என்று தான் விஜய் ரசிகர்கள் அனைவரும் தயாரிப்பாளர் இடம் தினம் தோறும் கேட்டு வருகின்றனர். 

இந்நிலையில் ட்விட்டரில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி சில முக்கிய விஷயங்கள் பற்றி பதிவிட்டுள்ளார். அப்டேட் கொடுக்கவேண்டும் என்றால் கன்டென்ட் ரெடியாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார் அவர். 

அதன்பிறகு பிகில் புதிய போஸ்டர் உடன் பிகில் தீபாவளி ரிலீஸ் என்பதை உறுதியாக அறிவித்துள்ளார் அவர்.