கடந்த 2017-ம் ஆண்டு வெளிவந்த படங்களில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்ட படம் மெர்சல் என்று கூறலாம். ஹிட் என்ற நிலையில் நிற்க வேண்டிய அந்த படத்தை பிரபல அரசியல் கட்சி ஒன்று எதிர்த்து மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனால், அந்த படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. இந்த படத்தில் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்த ஆளப்போறான் தமிழன் பாடல் வைரல் ஹிட்டானது.
நடிகர் விஜய் மூன்று பல்வேறு கெட்டப்புகளில் நடித்திருந்த இந்த படத்தில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டது அப்பா விஜய் கதாபாத்திரம் தான்.
வசூலிலும் செம வேட்டை நடத்தி படத்தின் தலைப்பிற்கு ஏற்றார் போல மெர்சல் காட்டியது மெர்சல். ஆனால் சமீபத்திய ஒரு தொலைக்காட்சி பேட்டியில் தயாரிப்பாளர் கே. ராஜன் பேசும்போது, ஊரில் எல்லோரும் மெர்சல் படம் ஹிட் என்று கூறுவார்கள்.
ஆனால், படம் லாபமா என்றால் இல்லை. அப்படி என்றால் மெர்சல் படத்தை தயாரித்த ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் இதுவரை ஏன் அந்த படத்தையும் தயாரிக்கவில்லை. தயாரிக்க வேண்டாம் படத்தை வாங்கி விநியோகம் கூட இன்னும் செய்யவில்லை.
மெர்சல் படத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால், அவர்களின் அலுவலகத்தையே காலி செய்துவிட்டார்கள், லாபம் என்றால் இன்னும் இரண்டு ரூமை வாடகைக்கு வாங்கி அலுவலகத்தை விரிவாக்கம் செய்திருக்கலாமே...! மெர்சல் படம் நிச்சயம் நஷ்டம் என்று பேசியுள்ளார்.