நடிகர் பிரபாஸ் நடிப்பில் 350 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள திரைப்படம் சாஹோ. இந்த படம் ஆரம்பமாகும் போது இருந்த அந்த கிரேஸ் மற்றும் பரபரப்பு படம் முடிவடைந்துள்ள நிலையில் குறைந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.
வரும் 30-ம் தேதி வெளியாகவுள்ள இந்த படத்தின் இறுதிகட்ட ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறது படக்குழு. பிரபாஸும் தன் பங்கிற்கு ப்ரமோஷன் வேலைகளை செய்து வருகிறார்.
அப்படி ஒரு ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிராபாசிடம் நடிகர் விஜய் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அவரிடம், ஒரு வேளை பாகுபலி படத்தில் நடிகர் விஜய் நடித்திருந்தால் அவருக்கு எந்த கதாபாத்திரத்தில் நடிக்கலாம் என்று கேட்டனர். இதனை கேட்ட பிரபாஸ் சற்றும் யோசிக்காமல் :பாகுபலியாகவே நடிக்கலாம்" என்று அதிரவைத்தார்.