தெறி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் பிகில். இப்படத்தில், விஜய் அப்பா – மகன் என்று இரு வேடங்களில் நடித்துள்ளார்.
பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். உடன் யோகி பாபு, கதிர், விவேக், இந்துஜா, ஜாக்கி ஷரூப், டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், சவுந்தரராஜா, தேவதர்ஷினி, ரெபா மோகா ஜான், வர்ஷா போலம்மா, ஐஎம் விஜயன் உள்பட பலர் நடித்துள்ளனர்.
இசைப்புயல் ஏஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. கிட்டத்தட்ட ரூ.140 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரவிருப்பதால் படக்குழுவினர் தீவிரமாக வேலை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த படத்தில் விஜய் பாடியுள்ள "வெறித்தனம்" பாடல் இன்னும் ஒரு வாரத்திற்குள் வெளியாகும் என நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவித்து வரும் நிலையில் இந்த பாடலுக்கான ரெக்கார்டு இப்படித்தான் இருக்க வேண்டும் என இமாலாய இலக்கை விஜய் ரசிகர்கள் பகிர்ந்து வருகிரார்கள்.
இதனை பார்த்த ஒரு தரப்பு ரசிகர்கள் இதெல்லாம் நடக்குற காரியமா.? என கேட்டு வருகிறார்கள். ஆனால், விஜய் ரசிகர்களோ நடத்தி கட்டுகிறோம் என்று சவால் விட்டு வருகிறார்கள்.
Tags
Bigil Movie