நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் உருவாகும் வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து வருகின்றார். நடிகை சமந்தா நடிப்பில் இந்த ஆண்டில் வெளியான சூப்பர் டீலக்ஸ், ஓ பேபி போன்ற படங்கள் நல்ல வசூலைப் பெற்றுள்ளது.
அதனைத் தொடர்ந்து தற்போது ‘96’ தெலுங்கு ரீமேக்கில் கவனம் செலுத்தி வந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் அதன் வெளியீட்டிற்காக சமந்தா காத்திருக்கிறார்.
இந்நிலையில் தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்தி வந்த சமந்தா தற்போது உள்ள ட்ரெண்டுக்கு ஏற்றவாறு வெப் சீரிஸ்ஸில் நடித்து வருகிறாராம்.
தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் உருவாகும் இந்த வெப் சீரிஸின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வெப் சீரிஸ் அமேசான், நெட்பிளிக்ஸ் என்று எந்த நிறுவனத்தில் வெளியாகும் என்ற விவரத்தை கூட ரகசியமாக வைத்துள்ளார்கள்.
தற்போது படங்களை விட தமிழ் ரசிகர்கள் வெப் சீரிஸ்க்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். ஆதலால் பல முன்னணி நடிகர், நடிகைகள் இதில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர்.
இந்த வெப் சீரியஸின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் நடிகை சமந்தா கண்ணிற்கே தெரியாத குட்டியான சார்ட்ஸ் அணிந்து கொண்டு தனது தொடையழகை காட்டியபடி போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ஒன்றுஇணையத்தில் வெளியாகியுள்ளது.
ஒருvவேளை வெப் சீரியஸில் இந்த கெட்டப்பில் தான் நடிக்கிறாரா..? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.



