உடல் எடை குறைத்து ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப்போன நடிகை நவ்யா நாயர்


அழகிய தீயே, மாயக் கண்ணாடி, ராமன் தேடிய சீதை, பாசக்கிளிகள் உள்ளிட்ட தமிழ் படங்கள் உட்பட ஏரளாமான மலையாள படங்களிலும் நடித்து பிரபலன்மானவர் நடிகை நவ்யா நாயர்.

2010-ல் சந்தோஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சாய்கிருஷ்ணா என்ற மகன் இருக்கிறான். திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலகிய நவ்யா நாயர், தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். 

சினிமா அனுபவங்கள் குறித்து நவ்யா நாயர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,நான் நடித்த முதல் மலையாள படம் இஷ்டம். 2001-ல் வெளியானது. டைரக்டர் சிபி மலயில் எனது போட்டாவை பார்த்துவிட்டு ஒரு ஓட்டலுக்கு அழைத்து நடிப்பு திறமையை பரிசோதித்தார். 


அதை வீடியோவாக பதிவு செய்தார். அந்த வீடியோவை பார்த்த திலீப்புக்கு எனது நடிப்பு பிடித்ததால் இஷ்டம் படத்தில் நடிக்க அவரும், மஞ்சுவாரியரும் என்னை தேர்வு செய்தனர்.


அப்போது வேண்டாம் என்று அவர் ஒதுக்கி இருந்தால் நான் சினிமாவுக்கே வந்து இருக்க முடியாது. அதன் படப்பிடிப்புக்காக போட்டோ ஷூட் எடுத்தனர். அப்போது திலீப் எனது தோளில் கைவைத்தபடி போஸ் கொடுத்தார். உடனே எனக்கு படபடப்பு ஏற்பட்டது. இதய துடிப்பும் அதிகமானது.

கிராமத்தில் இருந்து வந்த என் மீது அறிமுகம் இல்லாத ஆண் கைவைத்ததால் சங்கடத்துக்கு உள்ளானேன். அதை புரிந்துகொண்ட திலீப் பயப்பட வேண்டாம். எல்லோரும் ஆதரவாக இருப்போம். இந்த படத்தில் ஒன்றாக பணியாற்ற போகிறோம் என்று தைரியம் சொன்னார். அதை எப்போதும் மறக்க முடியாது.

இப்போது, பட வாய்ப்புக்காகவும் உடல்நலனுக்காகவும் உடல் எடையை குறைத்து வருகிறேன் என்று கூறியிருந்த நவ்யா நாயர் நிஜமாகவே கணிசமாகஉடல் எடையை குறைத்து ஆளே மாறிப்போய்விட்டார். அவருடைய உடற்பயிற்சி வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார் நவ்யா. 

இதோ அந்த வீடியோ,
Previous Post Next Post
--Advertisement--