பிங்க் படத்தில் அமிதாப் செய்த தவறை நேர்கொண்ட பார்வையில் சரி செய்த நடிகர் அஜித்குமார்..! - வேற லெவல்.!


அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் டைரக்சனில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படம் வரும் நாளை ஆகஸ்ட் 8ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதேசமயம் வழக்கமாக அஜித் படங்கள் வெளியாகும்போது ஏற்படும் ஒரு பரபரப்பில் தற்போது பாதி அளவு மட்டுமே காணப்படுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

அதற்கு காரணம் இந்த படம் அமிதாப் நடித்த இந்திப்படத்தின் ரீமேக் என்பதும் நட்பிற்காக, சொல்லப்போனால் ஒரு அன்பு கட்டாயத்திற்காக இந்த ரீமேக்கில் அஜீத் நடித்தார் என்கிற செய்திகள் படம் துவங்கிய நாளிலிருந்து பரவி வந்தன.

மேலும் இந்த படத்தில் கமர்ஷியல் அம்சங்கள் குறைவு என்றும் சொல்லப்பட்டு வந்தது. ஆனால் இந்த படத்தில் பெண்கள் பாதுகாப்பு, பெண்கள் விழிப்புணர்வு பற்றி ஒரு அருமையான கருத்து அஜித் மூலம் சொல்லப்பட்டுள்ளது. அதனால் இந்தப் படத்தைப் பற்றி படம் வெளியாவதற்கு முன்பே ரசிகர்களிடம் கொண்டு செல்வதற்காக போனி கபூர் ஒரு புத்திசாலித்தனமான முடிவை எடுத்தார்.

வழக்கமாக அஜித் மற்றும் எந்த ஒரு முன்னணி நடிகரின் படத்திற்கும் வெளியாகும் நாளன்றோ அல்லது அதற்கு மறுதினமோ தான் பத்திரிக்கையாளர் காட்சி திரையிடப்படும்.. ஆனால் ஒரு மிகப்பெரிய மாற்றமாக நேர்கொண்ட பார்வை படத்தின் பத்திரிக்கையாளர் காட்சியை இரண்டு நாட்கள் முன்கூட்டியே திரையிட்டு காட்டியுள்ளார் போனி கபூர்.


இதன் மூலம் இந்த படத்தை பற்றிய ஒரு சரியான பிம்பம் ரசிகர்களுக்கு பத்திரிகை விமர்சனங்கள் மூலம் சென்று சேரும் என்பதாலேயே இந்த முடிவை அவர் எடுத்துள்ளார் என்பது தெரிகிறது.


பிங்க் படத்தை ஒப்பிடும் போது முதன் பாதியில் ஒரு ஸ்டண்ட் காட்சியும், இரண்டாம் பாதியில் ஒரு பாடல் காட்சியும் சேர்க்கப்பட்டுள்ளது. அதேபோல க்ளைமாக்ஸ் காட்சியிலும் சில விஷயங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. 

மேலும் இந்தி படத்தின் கதைப்படி வழக்கறிஞராக வரும் அபிதாப் ஒரு குடிகாரர். அவருக்கு படத்தில் குடிப்பது மட்டுமே பெரிய விஷயமாக காட்டப்பட்டிருக்கும். 

ஆனால் இந்த படத்தில் அஜித் குடிகாரர் இல்லை. மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளி. வழக்கறிஞராக நடிக்கும் தன்னை குடிகாரராக தன்னைக் காட்டிக்கொண்டால், தனது இமேஜ் பெரிய அளவில் பாதிக்கப்படும். மேலும், ரசிகர்களுக்கும் தவறான வழியை காட்டுவது போல ஆகிவிடும். இதை எல்லாம் யோசித்து தான் இந்த முடிவை எடுத்திருக்கிறார் அஜித்.வேற 
லெவல் தல..!