குறும்புத்தனமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த நடிகை ஜெனிலியா இப்பொது எப்படி இருக்கிறார் பாருங்க...!


இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தில் அறிமுகமானவர் நடிகை ஜெனிலியா. விஜய் நடித்த சச்சின், மற்றும் வேலாயுதம் உள்ளிட்ட பல படங்களில் நடித்த அவர் பாலிவுட்டிலும் சில படங்களில் நடித்தார். சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் இவரது குறும்புத்தனமான நடிப்பு பலரையும் ஈர்த்தது.

கடந்த 2012-ம் ஆண்டு நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை காதலித்து திருமணம் செய்து கொண்ட அவர் திரையுலகிலிருந்து விலகியிருந்தார். ரித்தேஷ் தேஷ்முக் - ஜெனிலியா தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். 

தற்போது, குடும்ப குழந்தைகள் என குடும்ப வாழ்கையை மேற்கொண்டுள்ள இவருக்கு (ஆகஸ்ட் 5-ம் தேதி) இன்று தான் பிறந்தநாள். குடும்பத்தினருடன் தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் இவர் என்னுடைய வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருந்த ரசிகர்களுக்கும் மற்றும் பிறந்தநாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும் செஞ்சார்ந்த நன்றிகள் என கூறியுள்ளார்.

தற்போது, மராத்தி மொழியில் சில படங்களிலும் நடித்து வருகிறார். இதோ அவருடைய சமீபத்திய புகைப்படம், 



Previous Post Next Post
--Advertisement--