"இன்னுமா பாஸ் பண்ணல..?" - நயன்தாராவை கலாய்க்கும் ரசிகர்கள்..!


இளைய தளபதியின் அசத்தலான நடிப்பில், அட்லீ அவர்களின் இயக்கத்தில் உருவாகிவரும் பிகில் படத்தில் விஜய் அப்பா – மகன் என்று இரண்டு வேடங்களில் நடிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையில் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. 

இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. இன்னும் சில தினங்களில் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து விடும். முன்னணி இசையமைப்பாளர்கள் பலரது இசையில் பாடியுள்ள விஜய் முதன்முறையாக ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஒரு பாடல் பாடியுள்ளார். 


முன்னதாக அழகிய தமிழ்மகன், மெர்சல், சர்கார் ஆகிய படங்களில் இருவரும் இணைந்து பணியாற்றிய போதும் ரகுமான் இசையில் விஜய் பாடவில்லை. பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராக விஜய் நடிக்க, ரெபா மோனிகா ஜான், இந்துஜா ஆகியோர் கால்பந்து வீராங்கனைகளாக நடித்துள்ளனர். 


இதில் கதாநாயகி நயன்தாராவுக்கு என்ன வேடம் என்பது விடை தெரியாத கேள்வியாகவே இருந்த நிலையில் அவர் மருத்துவ மாணவியாக நடிக்கிறார் என சில தகவல்கள் கசிந்தன. அது இப்போது உறுதியாகியுள்ளது.இதனை அறிந்த ரசிகர்கள் 2005-ம் ஆண்டு வெளியான கஜினி படத்துல மெடிக்கல் படிக்க ஆரம்பிச்சவங்க 14 வருடம் ஆகியும் இன்னும் மெடிக்கல் படிச்சுட்டு இருக்காங்க..! இன்னுமா பாஸ் பண்ணல..? என்று கிண்டலடித்து வருகிறார்கள். 

ஆனால், நயன்தாரா ரசிகர்கள் எங்கள்தலைவி விஸ்வாசம் படத்திலேயே மருத்துவர் ஆகிவிட்டார் என்று பதில் கொடுத்தும் வருகிறார்கள்.
Previous Post Next Post
--Advertisement--