இணையத்தில் வைரலாகும் சமந்தாவின் உடற்பயிற்சி வீடியோ - வாயை பிளந்த ரசிகர்கள் - வீடியோ உள்ளே


"பாணா காத்தாடி" படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சமந்தா, ஏராளமான தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு, நடிகர் நாகர்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்தடார். 

ஆனால், திருமணத்திற்கு பின்பும், தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். தற்போது சமந்தா நடித்த "ஓ பேபி" திரைப்படம் வெளியாகி, அவரது ரசிகர்களிடையே பெரும் ஆதரவை பெற்றுள்ளது. 


இந்நிலையில், அடுத்த ஒன்றரை வருடத்திற்கு, சினிமாவில் நடிப்பதை நிறுத்தி வைக்கவும், குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தவும், சமந்தா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


அதே நேரம் தன்னுடைய உடல் நலத்தில் அதீத அக்கறை கொண்ட சமந்தா யோகா, உடற்பயிற்சி போன்றவற்றை தொடர்ந்து செய்து வருகிறார். அடிக்கடி, யோகா, மற்றும் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு தன்னுடைய ஃபிட்னெஸ் குறித்து கூறிக்கொண்டே இருப்பது சமந்தாவின் வழக்கம். 

அந்த வகையில், இப்போது, கடுமையான உடற்பயிற்சி ஒன்றை அசால்டாக செய்து அசத்தும் வீடியோ ஒன்றை இணையத்தில் பகிர்ந்துள்ளார் சம்மு. இதனை பார்த்த ரசிகர்கள் வாயை பிளந்து வருகிறார்கள்.

இதோ அந்த வீடியோ,
Previous Post Next Post
--Advertisement--