இந்த தகவலை படித்த பின்பு கொடும காலம் டா சாமி என்று தலையில் அடித்துக்கொள்வீர்கள். அந்த அளவுக்கு மோசமான ஒரு விஷயம் நிஜமாகவே நடந்துள்ளது.
உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த கோரக்பூரில் உள்ள ஒரு கிராம பஞ்சாயத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ராஜேஷ் பால் என்பவரின் மனைவி சீமா பால் (25) அதே பகுதியை சேர்ந்த உமேஷ் பால் என்ற 27 வயது நபரை கள்ளத்தனமாக காதலித்து வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் நான் உன்னுடன் வாழ விரும்பவில்லை. நான் உமேஷ் பாலுடன் செல்கிறேன் என்றுவீட்டை விட்டு சென்று உமேஷ் பாலுடன் கடந்த சில மாதங்களாக குடும்பம் நடத்தி வந்துள்ளார் சீமா பால்.
இதனை தொடர்ந்து, பஞ்சயாத்து கூட்டி இந்த விவாகரத்திற்கு தீர்வு காண ஏற்பாடு செய்துள்ளார்கள். பஞ்சாயத்திலும் நான் கணவருடன் வாழ விரும்பவில்லை உமேஷ் பாலுடன் செல்கிறேன் என்று கூறியுள்ளார்.
இறுதியாக, கணவர் ராஜேஷ் சரி உன் விருப்பப்படி உன்னுடைய காதலனுடன் செல் என்று கூறியுள்ளார். ஆனால், உன் காதலன் எனக்கு அவன் வளர்க்கும் 71 ஆடுகளை கொடுக்க வேண்டும் என்று டீல் பேசியுள்ளார்.
இந்த டீலுக்கு ஒப்புக்கொண்ட காதலன் உமேஷ். அவர்களது கொட்டகையில் இருந்த 71 ஆடுகளை ராஜேஷிடம் ஒப்படைத்து விட்டு அவனது மனைவியும், தன்னுடைய காதலியுமான சீமா பாலை அழைத்து சென்றுள்ளார்.
இருவரும் இப்போது மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். ஆனால், உமேஷின் அப்பா எப்படி என்னுடைய அனுமதியில்லாமல் நான் வளர்த்த ஆடுகளை நீ ராஜேஷிற்கு கொடுத்தாய் என்று சண்டை போட்டுள்ளார்.
இந்த விவகாரத்தை காவல் நிலையம் வர கொண்டு சென்றுள்ளார் உமேஷின் தந்தை. ராஜேஷ் அவரது மனைவியைஅழைத்து செல்ல சொல்லுங்கள். என்னுடைய ஆடுகள் எனக்கு வேண்டும் என கூறியுள்ளார்.
இதனை விசாரித்த காவல் துறையினர், சிமா பாலையும், உமேஷ் பாலையும் அழைத்து விசாரித்துள்ளனர். விசாரணையில், சீமா பால், உமேஷின் குழந்தயை வயிற்றில் சுமப்பது தெரிய வந்துள்ளது. ஆனால், உமேஷின் தந்தை எனக்கு ஆடுகள் வேண்டும் என்று விடாப்பிடியாக இருந்துள்ளார்.
தொடர்ந்து முதல் கணவர் ராஜேஷ் பாலை அழைத்து அவரிடம் பேசியுள்ளனர். ஆடுகளை கொடுத்து விட்டுதானே அவளை அழைத்து சென்றார்கள் இப்போது ஆடுகளை திரும்ப கேட்டால் என்ன அர்த்தம் என கூறியுள்ளார்.
வேண்டுமென்றால் என்னுடைய மனைவியை என்னுடன் அனுப்புங்கள் நான் ஆடுகளை தருகிறேன் என்றுவாதம் செய்துள்ளார். ஆனால்,aஅவரது மனைவி சீமா பால், ராஜேஷுடன் நான் செல்ல மாட்டேன். அவரால், எனக்கு குழந்தை பாக்கியத்தை கொடுக்க முடியாது. ஐந்து வருடங்களாக நான் அவருடன் குடும்பம் நடத்தினேன் ஆனால், அவரால் எனக்கு குழந்தை பாக்கியத்தை கொடுக்க முடியவில்லை. எனவே, நான் அவருடன் செல்ல மாட்டேன் என்று கூறியுள்ளார்.
இதனை கேட்ட போலீஸ் அதிகாரிகள், ராஜேஷ் ஆடுகளை திருடவில்லை. உன் மகன் தான் கொடுத்துள்ளான். அதனால், ராஜேஷை எங்களால் தண்டிக்க முடியாது. என்று கூறி அனைவரையும் அனுப்பி வைத்து விட்டனர்.
ஷ்ஷப்பா..!
You May Like
Tags
Uttar Pradesh