நான் செய்ததை பார்த்து தலையில் அடித்து கொண்டார் நடிகர் விஜய் - பிரபல நடிகர் கூறிய உண்மை சம்பவம்


நடிகர் விஜய் தற்போது இயக்குனர் அட்லி இயக்கத்தில் பிகில் படத்தில் நடித்து வருகிறார். இறுதிகட்ட படப்பிடிப்பில் படக்குழுவினர் முமுரமாக ஈடுபட்டுள்ளனர். இது குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் நேற்று வெளியாகி வைரலாகின. 

இந்த படத்தில், இயக்குனரும், நடிகருமான மனோபாலா ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிகில் படம் பற்றி வெளியில் எதுவும் பேசக்கூடாது என அட்லீ கண்டிஷன் போட்டிருக்கிறாராம்.



இதனால், விஜய்யுடன் உங்களுக்கு ஏற்பட்ட மறக்க முடியாத அனுபவம் என்றால் எதை சொல்வீர்கள் என்று கேட்டதற்கு பதிலளித்த மனோபாலா, "தலைவா படத்தின் ஷூட்டிங் முடிந்து ஒரு நாள் இரவு டின்னர் சாப்பிட விஜய் என்னை அழைத்தார். 


நான் சைவம் தான் சார் சாப்பிடுவேன். அதனால் வேண்டாம் என மறுத்தேன். ஆனால், என்னை வற்புறுத்தி டின்னருக்கு அழைத்து சென்றார் விஜய். அப்போது, நான் தயிர் சாதம் ஆர்டர் செய்தேன். இதனை பார்த்த விஜய் சார், சைவத்தில் எவ்வளவோ இருக்கு..? ஆனா, நீங்க.... என்று என்னை பார்த்து தலையில் அடித்துக்கொண்டார். அது என்னால் மறக்க முடியாத அனுபவம் என்று கூறியுள்ளார் மனோபாலா.