பிக்பாஸ் வீட்டில் 16-வது போட்டியாளராக உள்ளே நுழைந்தவர் மீரா மிதுன். மாடலிங் துறையில் மோசடி செய்ததாக இவர் மீது காவல்துறையில் புகார்கள் உள்ள நிலையில் பிக்பாஸ் வீட்டையும் பரபரப்பாகவே வைத்திருந்தார்.
மேலும் பிக்பாஸ் வீட்டில் அனைவரிடமும் வாக்கு வாதத்திலும் ஈடுபட்டு வந்தார்.ஒரு டாஸ்க்கின் போது சேரன் தன்னை தவறாக தொட்டார் என்று இவர் வைத்த குற்றச்சாட்டு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அப்போது சேரன் உடைந்து கண்ணீர்வடித்தார். இதைக் கண்ட பிக்பாஸ் பார்வையாளர்கள் அவருக்கு எதிராக வாக்களித்து வெளியேற்றினர். வெளியேறும்போது கூட அவர் சேரன் மீது பழிசுமத்தினார்.
இந்நிலையில் 35 நாட்களுக்கு பிறகு மீண்டும் தான் தவறவிட்ட வாழ்க்கை கிடைத்திருப்பதாக குறிப்பிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடனமாடும் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார் மீரா மிதுன்.
இதனை பார்த்த ரசிகர்கள் என்ன கூறியிருப்பார்கள் என்று நாங்கள் சொல்லித்தான் தெரிய வேண்டுமா..? என்ன..? வச்சு செய்து வருகிறார்கள்.
இதோ அந்த வீடியோ,
Tags
meera mithun