நடிகர் விஜய்யின் வளர்ச்சி பாதை அவ்வளவு எளிதல்ல. தகப்பன் தூக்கி விட்ட தளபதி என்ற பேச்சு இவரை பற்றி பேசுவோம் இன்று தகப்பனால் தூக்கிவிடப்பட்ட மற்ற நடிகர்களின் தற்போதைய நிலையை யோசித்து பார்த்தால் விஜயின் வளர்ச்சி பற்றிய உண்மை தெரியும்.
இநிலையில், நடிகர் விஜய்யின் ஆரம்ப காலத்தில் கிட்ட தட்ட பத்து படங்களை தயாரித்தவரும் அவரது தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் சமீபத்திய பேட்டி ஒன்றில் சுவாரஸ்யமான விஷயம் ஒன்றை பதிவு செய்துள்ளார்.
விஜய் காமெடி கலந்த காதல் படங்களில் மட்டுமே நடித்து வந்த கால கட்டம் அது. விஜய் தொடர்ந்து ஒரே மாதிரியான படங்களில் நடித்து வருகிறார் என்ற டாக்கும் போய்க்கொண்டிருந்தது.
ஆக்ஷனுக்கு மாறலாமா..? என்று விஜய் மிகவும் யோசித்தார். அக்ஷன் படமெல்லாம் எனக்கு செட் ஆகாது பா என்ற முடிவில் இருந்த அவர் முதன் முறையாக "பகவதி" படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக களம் கண்டார்.
பகவதி படத்தில் நடிக்க விஜய் சுத்தமாக விருப்பமே இல்லை என்று கூறியுள்ளார் எஸ்.ஏ.சந்திரசேகர். அதனால் தான் முழு நீள ஆக்ஷன் படமாக இல்லாம படத்தில் கொஞ்சம் எக்ஸ்ட்ரா-வாக காமெடியை கலந்து விட்டார். அதிலும் நடிகர் வடிவேலுக்கு தனியாக ஒரு காமெடி ட்ராக்-கே இருக்கும். இந்த படத்தில் விஜய்யின் ஆக்ஷன் காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கிடைத்தது.
இதனால், விஜய்க்கு சற்றே நம்பிக்கை வந்தது. தொடர்ந்து, திருமலை, கில்லி, சிவகாசி, போக்கிரி என்று அடுத்தடுத்து அதிரடி படங்களை கொடுத்து ஆக்ஷன் ஹீரோவாக மாறினார். இந்த படங்கள் தான் விஜய்க்கான ரசிகர் வட்டத்தை பெரிய அளவில் வளர்த்துவிட்டன.