தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து இப்போது தமிழ் மற்றும் ஹிந்தி சினிமாவில் வளர்ந்து வருபவர் நடிகை ராகுல் பரீத் சிங்.
பாலிவுட்டில் எப்படியாவது தடம் பதித்து விட வேண்டும் என்ற நோக்கில் கவர்ச்சியில் தாராளமோ.. தாராளம் காட்டி வருகிறார் அம்மணி. இந்நிலையில், சினிமாவில் எத்தனையோ நடிகர்களுடன் வேலை செய்துள்ளீர்கள்.
உங்களுக்கு யார் மீது திருமணம் செய்து கொள்ளும் அளவுக்கு ஆசை வந்தது என்று ஒரு பேட்டியில் அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், நிச்சயமாக நடிகர் ரன்வீர் சிங் தான்.
அவருக்கும் தீபிகா படுகோனேவுடன் திருமணம் ஆகிவிட்டது. இல்லையென்றால், நிச்சயம் நான் அவரை திருமணம் செய்துகொண்டிருப்பேன். மேலும், என்னை திருமணம் செய்து கொள்ள விரும்புபவர் என்னை விட சற்று உயரமாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார் நடிகை ராகுல் பரீத் சிங்.


