மாநாடு படத்திலிருந்து, தான் நீக்கப்பட்டதை அடுத்து மகா மாநாடு என்ற புதிய திரைப்படத்தை தாமே இயக்கி, தயாரித்து நடிக்க உள்ளதாக சிம்பு அறிவித்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற படத்தில் சிம்பு , முதலில்நடிப்பதாக இருந்தது.
ஆனால், அண்மையில் இந்த படத்திலிருந்து சிம்பு நீக்கப்படுவதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்திருந்தார். இதற்கு பதிலடியாக, "மகா மாநாடு" என்ற புதிய படம் குறித்த அறிவிப்பை நடிகர் சிம்பு வெளியிட்டு உள்ளார்.
இந்த அறிவிப்பை கேட்ட ரசிகர்கள் பலரும் படத்தை அறிவிச்சிடீங்க..! அப்படியே எப்போது ட்ராப் ஆகும் என்பதையும் அறிவித்து விடுங்கள் என்று கிண்டலடித்து வருகிறார்கள். காரணம், நடிகர் சிம்பு நடிப்பில் இந்த படம் உருவாகவுள்ளது என்று கூறப்பட்ட சில படங்கள்தொடர்ந்து ட்ராப் ஆகி கொண்டே வருகின்றன என்பது தான்.
இந்நிலையில், சிம்புவை இயக்குனர் வெங்கட் பிரபு மறைமுகமாக தாக்கியுள்ளார். சுதந்திர தின வாழத்துகளை பதிவு செய்த அவர் "வம்பை வளர்க்காமல், அன்பை வளருங்கள்" என்று கூறியுள்ளார்.
— venkat prabhu (@vp_offl) August 15, 2019