ஹிந்தி, தெலுங்கில் சில படங்களில் நடித்து விட்டு ஜெமினி படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமானவர் கிரண். அதன்பின் கமல், அஜித், விஜய் முன்னணி நடிகர்களுடன் நடித்து ஒரு பெரிய ரவுண்டு வந்தார்.
ஒருகட்டத்தில் ஹீரோயின் வாய்ப்புகள் குறைந்ததும் குத்து பாடல்களுக்கு நடன மாடிய கிரண், விஷால் நடித்த ஆம்பள படத்தில் அம்மா வேடத்திலும் நடித்தார்.
சந்தானத்தின் சர்வர் சுந்தரம் படத்திலும் ஒரு கேரக்டரில் நடித்துள்ளார். சமீபகாலமாக உடலை பராமரிக்காமல் விட்டதால் உடல் எடை அதிகரித்து போனார் கிரண்.
அவ்வளவு தான் ஃபீல்டு அவுட்டான நடிகை என்று முத்திரை குத்தப்பட்ட இவர் நான் இன்னும் ஃபீல்டில் தான் இருக்கேன் என தற்போது உடல் எடையை ஓரளவுக்கு குறைத்து கவர்ச்சி புகைப்படங்களை அப்லோட் செய்து இளசுகளை கிறங்கடித்து வருகிறார்.
அவர் எடுத்த போட்டோ ஒன்றும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.