பூனம் பாஜ்வா, கிரண் அந்தரங்க உரையாடல் 3.5 கோடி ரூபாயை இழந்த பிரபலம்..!
தொழில்நுட்பம் மனித வாழ்க்கையை எளிதாக்கும் அதே வேளையில், அதனை தவறாகப் பயன்படுத்தி மோசடி செய்யும் கும்பல்களும் புற்றீசல் போல பெருகி வருகின்றன. இதற்கு சமீபத்திய உதாரணமாக, ஈரோட்டைச் சேர்ந்த ஒரு பிரபல தொழிலதிபர், சினிமா நடிகைகளான பூனம் பாஜ்வா மற்றும் கிரண் ஆகியோரை நம்பி மூன்றரை கோடி ரூபாயை இழந்த சம்பவம் அமைந்துள்ளது. இது இணைய மோசடியின் புதிய முகத்தை அம்பலப்படுத்தியுள்ளது. மோசடியின் தொடக்கம் இந்த தொழிலதிபர், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு, "பூனம் பாஜ்வா, கிரண் போன்ற சினிமா நடிகைகளுடன் நேரலையில் பேசலாம்" என்ற விளம்பரத்தை நம்பி ஒரு டேட்டிங் செயலியை பதிவிறக்கம் செய்தார். விளம்பரத்தில் கூறியபடியே, அவர் குறிப்பிட்ட நடிகைகளுடன் வீடியோ அழைப்பில் பேசியுள்ளார். ஆரம்பத்தில் எந்த பிரச்சனையும் இல்லாததால், அவருக்கு இது நம்பகமானதாகத் தோன்றியது. ஆனால், அவருக்குத் தெரியாமல், இந்த செயலி அவரது தனிப்பட்ட தகவல்கள், வங்கி கணக்கு விவரங்கள் உள்ளிட்டவற்றை மோசடி கும்பலுக்கு அனுப்பியது. ஆசை காட்டி மிரட்டல் மோசடி கும்பல், இவரது தகவல்களைப் பயன்படுத்தி, அழகான பெண்களுடன் வீடியோ அழைப்பில் பேச வைத்து ஆசை கா...