தமிழில் 'சண்டக்கோழி', 'ரன்' ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர் மீரா ஜாஸ்மின். இவர் விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் நடித்துப் பெயர் பெற்றவர்.பிறகு தனக்கு மார்க்கெட் குறைவதை அறிந்து அவரே சினிமாவை விட்டு விலகி, திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டார்.
சில வருடங்களுக்கு முன்பு வரை தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் கொடிகட்டி பறந்தவர் நடிகை மீரா ஜாஸ்மின். 'சண்டக்கோழி', 'ரன்' உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்த இவர் 'புதிய கீதை' படத்தில் விஜய்யுடனும், 'ஆஞ்சநேயா' படத்தில் அஜித்துடனும் நடித்துள்ளார்.
தமிழில் கடைசியாக, சந்தானம், விடிவி கணேஷ் ஆகியோர் நடித்த 'இங்க என்ன சொல்லுது' படத்த்திலும், விஞ்ஞானி எனும் படத்திலும் நடித்திருந்தார். தேசிய விருது, தமிழ்நாடு மற்றும் கேரளா அரசுகளின் மாநில விருதுகளையும் பெற்றிருக்கிறார் மீரா ஜாஸ்மின்.
கடந்த 2014-ம் வருடம் இவர் திருமணம் செய்துகொண்டாலும் கூட, மற்ற சில நடிகைகளைப்போல சினிமாவை விட்டு முழுவதுமாக ஒதுங்கிவிடாமல் அவ்வப்போது ஒன்றிரண்டு படங்களில் தலைகாட்டி வருகிறார்.
இந்நிலையில், மீரா ஜாஸ்மின் உடல் எடை அதிகரித்து பொசு பொசு தோற்றமளிக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியது. அது ஒரு நகைக்கடையில் எடுக்கப்பட்ட புகைப்படம். எப்படி இருந்த மீரா ஜாஸ்மின் இப்படி ஆகிட்டார் என ரசிகர்கள் ஷாக் ஆனார்கள்.
ஆனால், தற்போது, மீண்டும் உடல் எடை குறைத்து பழைய மீரா ஜாஸ்மினாக மாறியுள்ளார் அம்மணி. தன்னுடைய தங்கை திருமணத்தில் பங்கேற்ற அவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகின்றன.