தமிழ் சினிமா வரலாற்றில் முதன் முறையாக வித்தியாசமான முறையில் "பிகில்" இசை வெளியீடு - எப்போது தெரியுமா..?


விஜய்யின் பிகில் படம் தான் தமிழில் அடுத்து வெளியாகப்போகும் பெரிய படம். படத்தின் படப்பிடிப்பு ஓவர், அடுத்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தான்.

இதற்கு நடுவில் ரசிகர்களுக்கு ஒரு பெரிய கேள்வி இருக்கிறது, அதாவது படத்தின் இசை வெளியீடு எப்போது என்பது தான். 


தற்போது என்னவென்றால் படத்தின் இசை வெளியீடு செப்டம்பர் இரண்டாம் வாரம் அல்லது மூன்றாவது வாரத்தில் நடக்கவுள்ளது என்ற தகவல்கள் கசிந்துள்ளன.


இந்த தகவல் ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை கொடுத்தாலும் அதிகாரபூர்வ அறிவிப்பு என்ன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.


மேலும், தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதன் முறையாக இசை வெளியீட்டு விழாவிற்கு ஆன்லைன் மூலம் டிக்கெட் வழங்கப்படவுள்ளது. முன்னதாக, மெர்சல் படத்தின் பாடல்களை ஆன்லைன் மூலம் ஒவ்வொரு ரசிகனும் ரிலீஸ் செய்வது போன்ற ஏற்பாட்டை செய்திருந்தார்கள். 

இப்போது, ஆன்லைன் மூலம் டிக்கெட்களை விற்பதன் மூலம் பல ஊர்களில் இருந்து ரசிகர்கள் பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக கூறுகிறார்கள்.