"பிகில்" இசை வெளியீட்டு விழா எப்படி..? எங்கே நடக்கவுள்ளது தெரியுமா..? - வேற லெவல் அப்டேட்..!


அட்லீ இயக்கத்தில் விஜய், நயன்தாரா, இந்துஜா, யோகிபாபு, கதிர், ஜாக்கி ஷெராப் உள்பட பலர் நடித்து வரும் படம் பிகில். கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். 

தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடை பெற்று வரும் பிகில் படத்தின் பர்ஸ்ட்லுக் மற்றும் சிங்கப்பெண்ணே பாடல் வெளியான நிலையில், வெறித்தனம் என்ற பாடல் விரைவில் வெளியாக உள்ளது. 


அதனை தொடர்ந்து படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கான மேடை அமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இதில் என்ன ஸ்பெஷல் விஷயம் என்று கேட்கிறீர்களா..?. ஆம், பிகில் திரைப்படம் கால் பந்தாட்டத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ளது என்பது எல்லோருக்கும் தெரியும்.


அதனால், ஆடியோ வெளியீட்டு விழாவையும் கால் பந்தாட்ட மைதானம் போலவே செட் அமைத்து நடத்தவுள்ளனர். இதற்காக, பல கோடி ரூபாய் செலவு செய்யவுள்ளது தயாரிப்பு நிறுவனம். மேலும், இதற்கான டிக்கெட்டுகளையும் படக்குழுவே நேரடியாக இணையத்தில் விற்பனை செய்ய ஏற்பாடு செய்துள்ளது. 


Previous Post Next Post
--Advertisement--