இந்த வருடத்தில் விஸ்வாசம் படத்தின் இமாலய வெற்றியை தொடர்ந்து இதே வருடத்தில் இரண்டாவது படமாக நடிகர் அஜித் ஹெச்.வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்துள்ளார்.
நேற்று உலகம் முழுதும் இந்த படம் வெளியாகி ரசிகர்களிடம் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே நல்ல விமர்சனங்களை பெற்று வருகின்றது.
இப்படம் பாலிவுட்டில் வெளியான பிங்க் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடித்த கதாபாத்திரத்தில் அஜித் நடித்திருக்கிறார். இந்த படத்தை ஸ்ரீதேவியின் கணவரான போனி கபூர்தான் தயாரித்திருக்கிறார்.
வழக்கமான அஜித் படங்களுக்குகிடைக்கும் அதே பிரமாண்ட ஒப்பனிங் ரீமேக் படமான இந்த படத்திற்கு வேலை நாளிலும் கிடைத்துள்ளது. இந்நிலையில், முதல் நாளான நேற்று சென்னையில் மட்டும் 1.60 கோடி வசூல் செய்துள்ளது இந்த படம். இன்று மற்றும் சனி, ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் இந்த வசூல் அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளதாக பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நடிகர் விஜய்யின் மெர்சல் படத்தின் முதல் நாள் வசூலை மிஞ்சிவிட்ட இந்த படம் சர்கார் படத்தின் முதல் நாள் வசூல் சாதனையை முறியடிக்க தவறி விட்டது. காரணம், சென்னையில் சர்கார் படத்தின் முதல் நாள் வசூல் 2.37 கோடி என்பது தான்.