அதை மறக்க மாட்டோம் தலைவா..! - விஜய் ரசிகர்கள் உருக்கமான போஸ்டர்..!


நடிகர் விஜய் ரசிகர்களை சாதரணமாக மற்ற நடிகர்களின் ரசிகர்களுடன் ஒப்பிட்டு விட முடியாது. படங்களுக்கு எதிராக எப்போதும் வரும் பிரச்சனைகளில் நடிகருக்கு உறுதுணையாக இருப்பது மட்டுமல்லாமல் நடிகர் விஜய்யை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல எப்போதும் தயாராக இருகிறார்கள்.

அரசியல் கட்சிக்கு நிகரான ரசிகர் மன்ற கட்டைமைப்பு கொண்ட ஒரே நடிகர் விஜய் தான். மாவட்டம் வாரியாக தலைமை ரசிகர் மற்றும் நிர்வாகிகள். அவர்களுக்கு கீழ் வட்டம், மற்றும் சிறு,குறு கிராம ரசிகர் மன்றம் என ஒரு மரம் போல வளர்ந்து இருக்கிறது விஜய்யின் ரசிகர் மன்றம். 

விஜய் சினிமா வரலாற்றில் இன்றும் பல விஜய் ரசிகர்கள் பலரும் பேசிக்கொண்டிருக்கும் மறக்க முடியாத விஷயம் "தலைவா" படத்தின் போது எழுந்த சர்ச்சை பற்றித்தான். 

இந்த சர்ச்சையின் போது படம் ரிலீசாகவில்லை என கூறி ரசிகர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இது நடந்து ஆறு வருடங்கள் ஆகியுள்ள நிலையில் அதை மறக்க மாட்டோம் தலைவா என விஜய் ரசிகிர் பதிவிட்டு வருகின்றனர். #ThalaivaaDay #6YearsOfThalaivaa என்ற ஹாஸ்டேக்கில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். மேலும் இது பற்றி உருக்கமாக விஜய் ரசிகர்கள் போஸ்டர்களும் ஒட்டியுள்ளனர்.