நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.
பாலிவுட்டில் வெளியான பிங்க் படத்தின் அடிப்படைக் கதை அம்சத்தை மட்டும் கையில் எடுத்துக்கொண்டு தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ப கமர்ஷியல் அம்சங்களை சேர்த்து நேர்கொண்ட பார்வை படத்தை உருவாகியிருப்பதாக இயக்குநர் ஹெச்.வினோத் கூறியுள்ளார்.
நாளை வெளியாக உள்ள நிலையில் எல்லா திரையரங்களிலும் டிக்கெட் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. டிக்கெட்டை வாங்க ரசிகர்கள் திரையரங்குகள் முன் குவிந்துள்ளனர்.
இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், ‘என்னுடைய மனைவி ஸ்ரீதேவியின் கனவை நான் நிறைவேற்றிவிட்டேன். அஜித்குமார் மற்றும் இயக்குநர் ஹெச்.வினோத் இல்லாமால் இது சாத்தியமில்லை. நேர்கொண்ட பார்வை படக்குழு அனைவருக்கும் எனது வாழ்த்துகள்’ என்று கூறியுள்ளார்.
ஒரு பக்கம் கொண்டாட்டங்கள் கலை கட்டிக்கொண்டிருக்க பிரபல திருட்டு வீடியோ வளைத்தளம் ஒன்றில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியாகியுள்ளது.
இன்னும் படமே ரிலீஸ் ஆகாத நிலையில் இணையத்தில் படம் லீக் ஆகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுதியுள்ளது. கடந்த சில நாட்களாக படத்தின் பிரீமியர்காட்சிகள் ஒளிபரப்பு செய்யபட்டு வந்த நிலையில் இன்று படத்தின் தியேட்டர் பிரின்ட் இணையத்தில் வெளியாகியுள்ளது அஜித் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Tags
Nerkonda Paarvai