இந்த வாரமும் நான் Hurt ஆகிட்டேன் வசனமே தானா..?? - அப்படி என்ன தான் Hurt ஆகுது இவங்களுக்கு..? - கடுப்பில் பிக்பாஸ் ரசிகர்கள்


பிக்பாஸ் சீசன் 3-யில் நடக்கும் காதல் நிகழ்வுகள் எதுவும் நம்பும்படி இல்லை. முதல் நாளே காதல் என்கிறார்கள். அடுத்த நாள் பிரிகிறார்கள். Hurt ஆகிட்டேன் என்று அழுகிறார்கள். 

அடுத்த நாள் இன்னொரு போட்டியாளருடன் நெருக்கமாக இருக்கிறார்கள். அவருடன் பிரிகிறார்கள். பிறகு, Hurt ஆகிட்டேன் என்கிறார்கள். கவின் அபிராமி, கவின் ஷாக்சி, கவின் லாஸ்லியா என இருந்தது பிக்பாஸ் காதல் விவகாரம். 


இப்போது, கொஞ்சம் முன்னேறி முகென் அபிராமி என்ற நிலையில் இருந்து, முகென் ஷாக்சி என்ற நிலைக்கு மாறியுள்ளது.


இப்போது, அபிராமி Hurt ஆகியுள்ளார். இப்படியே ஆளு மாத்தி ஆளு லவ் பண்ணிக்கிட்டு Hurt ஆகிட்டே இருங்க..! அப்படி என்ன தான் உங்களுக்கு Hurt ஆகுதோ தெரியவில்லை..! என கடுப்பில் உள்ளனர் பிக்பாஸ் ரசிகர்கள்.